பள்ளி நடவடிக்கைகளில் ஒழுக்கம் தவறிய பிரான்ஸ் மாணவர்கள் 85 பேர் விலக்கப்பட்டுள்ளனர்

#France #Lanka4 #students #லங்கா4 #பிரான்ஸ் #France Tamil News #Tamil News
Mugunthan Mugunthan
3 months ago
பள்ளி நடவடிக்கைகளில் ஒழுக்கம் தவறிய பிரான்ஸ் மாணவர்கள் 85 பேர் விலக்கப்பட்டுள்ளனர்

பேராசிரியர் Samuel Paty 2020ல் Conflans-Sainte-Honorine பகுதியிலும், பேராசிரியர் Dominique Bernard 2023ல் Arras பகுதியிலும் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களுக்கான அரச தேசிய மரியாதை வணக்க நிகழ்வுகள், தேசிய கல்வி அமைச்சின் பணிப்பின்பெயரில் நாடுமுழுவதும் உள்ள கல்லூரிகளில் நடத்தப்பட்டது.

 குறித்த வணக்க நிகழ்வுகளையும், ஒரு நிமிட மௌன அஞ்சலி நிகழ்வுகளையும் சீர்குலைத்த அல்லது அவமதித்த மாணவர்கள் மீது கல்வி அமைச்சின் ஒழுங்காற்று குழு நடவடிக்கைகள் எடுத்துள்ளது அதன்படி 85 மாணவர்கள் நிரந்தரமாக கல்லூரிகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். 

605 மாணவர்கள் மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்ட 605 மாணவர்களில் 322 மாணவர்கள் தற்காலிகமாக கல்லூரிகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர், ஏனையோர் மீது முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

images/content-image/1700823974.jpg

 சாதரணமாக கல்லூரியின் ஒழுங்கு முறைகளை மீறும் மாணவர்கள் கல்லூரி அதிபர் கொண்டு குழுவால் மூன்று தடவைகள் முன்னெச்சரிக்கை செய்யப்பட்டு, அதன் பின்னரே ஒழுங்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆனால் மேல் குறிப்பிட்ட ஒழுங்காற்று நடவடிக்கை நேரடியாகவே எடுக்கப்பட்டுள்ளது.

 ஒரு மாணவன் கல்லூரியில் இருந்து தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ நீக்கப்பட்டால், பிரான்சின் கடல்கடந்த மாவட்டங்கள் உட்பட நாட்டின் எந்தவொரு கல்லூரியிலும் கல்விகற்க முடியாது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு