ரசிகர்களால் சாதனை படைக்கப்பட்ட உலகக் கோப்பை தொடர்

#people #Cricket #WorldCup #Crowd #WorldRecord #ICC #Final
ரசிகர்களால் சாதனை படைக்கப்பட்ட உலகக் கோப்பை தொடர்

இந்தியாவில் சமீபத்தில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த அக்டோபர் 5-ம் தேதி தொடங்கி 7 வார காலமாக நடந்த இந்த கிரிக்கெட் திருவிழா கடந்த 19ம் தேதியுடன் நிறைவு பெற்றது. 

இதில் ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் , இந்த உலகக் கோப்பை தொடர் முழுவதையும் 1.25 மில்லியன் ரசிகர்கள் நேரில் கண்டுகளித்துள்ளனர் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

45 நாட்கள் நடந்த இந்த தொடரை கிட்டத்தட்ட 12,50,307 ரசிகர்கள் மைதானத்துக்கு வந்து நேரில் கண்டுகளித்துள்ளனர். 

இது உலக சாதனையாக மாறியுள்ளது. கடந்த 2015ல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்த உலகக் கோப்பை தொடரை 1.016 மில்லியன் ரசிகர்கள் நேரில் பார்த்ததே சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு