ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியில் நீர் வழங்கல் மறுசீரமைப்பு - இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்!
#SriLanka
#World Bank
PriyaRam
2 years ago
ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்றுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் கீழ் நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நீர் வழங்கல் துறையின் புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கொள்கைத் திட்டமிடல் மற்றும் கண்காணிப்புக் கட்டமைப்பு பற்றி இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.