விளக்கமறியல் கைதி உயிரிழப்பு - வட்டுக்கோட்டை பொலிஸார் இருவருக்கு எதிராக நடவடிக்கை!
#SriLanka
#Death
#Police
#Attack
PriyaRam
2 years ago
வட்டுக்கோட்டை பொலிஸ்நிலையத்தின் உத்தியோகத்தர்கள் இருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்த விளக்கமறியல் கைதியொருவர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தமை தொடர்பியே அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் மீது அவரது உறவினர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், யாழ்ப்பாணப் பிராந்தியத்துக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், சேவை அவசியம் கருதி இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.