கோப் குழு விசாரணையில் ரஞ்சித் பண்டாரவின் மகன் கலந்துகொண்டது ஏன்? சஜித் கேள்வி!

#SriLanka #Parliament #Sajith Premadasa #Srilanka Cricket #Ranjith Bandara
PriyaRam
2 years ago
கோப் குழு விசாரணையில் ரஞ்சித் பண்டாரவின் மகன் கலந்துகொண்டது ஏன்? சஜித் கேள்வி!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்ட போது, ​​கோப் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டாரவின் மகனும் கலந்து கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கோப் குழுவில் தனது வாய் மூடப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், இவ்வாறானதொரு பின்னணியில் ரஞ்சித் பண்டாரவின் மகன் எவ்வாறு கோப் குழுவில் கலந்துகொண்டார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

images/content-image/2023/11/1700119087.jpg

அதற்குப் பதிலளித்த சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, அவ்வாறான விடயம் தொடர்பில் தமக்குத் தெரியாது எனவும், இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு நாடாளுமன்றத்திற்கு அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!