கல்வி அலுவலகத்திலிருந்து மீட்கப்பட்ட சடலம்!

#SriLanka #Colombo #Police #Murder #Investigation
PriyaRam
2 years ago
கல்வி அலுவலகத்திலிருந்து மீட்கப்பட்ட சடலம்!

கம்பளை கல்வி அலுவலகத்தின் மலசலகூடத்தினுள் இருந்து நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கம்பளை கல்வி அலுவலகத்தில் பல்பணி உதவியாளராக கடமையாற்றிய கம்பளை ரத்மல்கடுவ பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நேற்று மாலை கம்பளை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

images/content-image/2023/11/1699936746.jpg

அதன்படி கம்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உறவினர்களால் சடலம் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கம்பளை மரண விசாரணை அதிகாரியின் உத்தரவின் பேரில் பிரேத பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!