உலகக்கிண்ண தொடர் குறித்து கருத்து தெரிவித்த இலங்கை அணி தலைவர் குசல் மெண்டிஸ்

#SriLanka #Lanka4 #Cricket #WorldCup #sri lanka tamil news #Player #Sports News
Prasu
2 years ago
உலகக்கிண்ண தொடர் குறித்து கருத்து தெரிவித்த இலங்கை அணி தலைவர் குசல் மெண்டிஸ்

ஒரு அணியாக சிறந்த முறையில் விளையாடிய போதிலும், துரதிஷ்டவசமாக போட்டிகளில் தோல்வியடைந்ததாக இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

அதற்காக மிகவும் வருந்துகிறேன் என அவர் தெரிவித்தார். "போட்டியைப் பற்றி நான் மிகவும் வருந்துகிறேன். எம்மால் சிறப்பாக நிறைவு செய்ய முடியவில்லை. அதைத் தவிர, எனக்கு சொல்ல எதுவும் இல்லை. "எமது ஆரம்பம் சிறப்பாக இருந்தது, ​​ போட்டியில் தோல்வியடையும் போது, ​​ என்ன செய்ய முடியும் என்று பார்த்தோம், ஒரு அணியாக எங்களால் முடிந்ததைச் செய்ய எதிர்பார்த்தோம்." "அணியில் ஒற்றுமை இல்லை என்பதை நான் ஏற்க மாட்டேன். 

அனைவரும் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றுதான் எதிர்பார்த்தனர்." "எனக்கு அணியில் இருந்து நிறைய ஆதரவு கிடைத்தது. போட்டிகளில் வெற்றி தோல்வியை கட்டுப்படுத்துவது கடினம். இனி வரும் தொடர்களை பார்த்து அதற்கேற்ப திட்டங்களை வகுக்க வேண்டும்." என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!