இஸ்ரேலுக்கு தகுந்த பாடம் கற்றுக்கொடுப்போம் - ஹமாஸ்

#Death #people #world_news #Israel #War #Rescue #Hamas
Prasu
1 year ago
இஸ்ரேலுக்கு தகுந்த பாடம் கற்றுக்கொடுப்போம் - ஹமாஸ்

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது.

இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இதற்கிடையே, இஸ்ரேல் ராணுவம் காசாவில் சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் அகதிகள் முகாம் மீது நடத்திய தாக்குதலில் 50-க்கும் அதிகமானோர் பலியாகினர்.

 இந்நிலையில், இஸ்ரேலுக்கு தகுந்த பாடத்தைக் கற்றுக்கொடுப்போம். அக்டோபர் 7-ம் தேதி நடத்திய தாக்குதல் போன்று மீண்டும் நடத்துவோம் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!