நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்புக்குத் தயாராகும் அரச வைத்திய அதிகாரகள் சங்கம்!

#SriLanka #strike #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்புக்குத் தயாராகும் அரச வைத்திய அதிகாரகள் சங்கம்!

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளை உள்ளடக்கிய மாகாண மட்டத்தில் அடையாள வேலை நிறுத்தம் இன்று (02.10) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.  

நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டை ஓரளவுக்கு தணிக்க அரசாநாங்கம் மருத்துவர்களைத் தக்கவைக்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே  இந்தப் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக சங்கம் அறிவித்துள்ளது.  

இதன்படி ஊவா மாகாணத்தில் இன்று காலை 08.00 மணி முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். 

இதேவேளை, சம்பளப் பிரச்சினை, அரச பல்கலைக்கழகங்களுக்கான நிதி வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக டாக்டர்கள் சங்க சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளரும்,  சிரேஷ்ட விரிவுரையாளருமான சாருதத்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார். .

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!