மீண்டும் இஸ்ரேல் செல்லும் அமெரிக்க வெளியுறவு மந்திரி

#America #State #Israel #War #Security #Visit #Hamas
Prasu
2 years ago
மீண்டும் இஸ்ரேல் செல்லும் அமெரிக்க வெளியுறவு மந்திரி

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். 

இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தனது ஆதரவை அளித்து வருகிறது.

 இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் நாளை மறுதினம் இஸ்ரேல் செல்கிறார். ஏற்கனவே கடந்த மாதம் 16-ம் தேதி அவர் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டது நினைவிருக்கலாம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4