தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது
#India
#Tamil Nadu
#prices
#Tamilnews
#Gold
#Breakingnews
Mani
2 years ago
கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக இருந்து வந்தது. இந்த நிலையில் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்து ரூ.45,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ. 20 குறைந்து ரூ. 5,715-க்கு விற்பனை செய்யப்படுகிறது.