இந்தியாவிற்கு திருப்பிவிடப்பட்ட விமானங்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தன!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இந்தியாவிற்கு திருப்பிவிடப்பட்ட விமானங்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தன!

மோசமான காலநிலை காரணமாக, இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்ட 02 விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன. 

மாலைதீவில் இருந்து நேற்று (30.10) புறப்பட்ட   UL 111 ரக விமானமும், இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து வந்த UL 365 ரக விமானமும் திருப்பி அனுப்பப்பட்டதாக விமான நிலைய பேச்சாளர் தெரிவித்தார். 

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களைச் சுற்றி மோசமான வானிலை காரணமாக விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன, 

மத்தள விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்ட பின்னர் இந்திய விமான நிலையத்திற்கு விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்ட முதல் தடவையாக இது கருதப்படுகிறது. அதன்படி, குறித்த இரண்டு விமானங்களும் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்திற்குத் திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!