ஆந்திரா ரெயில் விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு!

#Death #Accident #people #Train #2023 #Breakingnews #Died #ImportantNews #AndhraPradesh
Mani
2 years ago
ஆந்திரா ரெயில் விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசாவுக்கு நேற்று இரவு ஒரு பயணிகள் ரெயில் சென்றது. அந்த ரெயில் விஜயநகரம் மாவட்டத்தில் அலமந்தா- கன்டகப்பள்ளி இடையில் சிக்னலுக்காக காத்து நின்றது.

அப்போது அதே தடத்தில், விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு மற்றொரு பயணிகள் ரெயில் சென்றது. அது, நின்றுகொண்டிருந்த விசாகப்பட்டினம்- பாலசா பயணிகள் ரெயிலின் பின்புறத்தில் பலமாக மோதியது.

அதில் 3 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 32-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். படுகாயம் அடைந்தவர்களின் சிகிச்சைக்காக 2 லட்சம் ரூபாய், லோசான காயம் அடைந்தவர்களின் சிகிச்சைக்காக 50 ஆயிரம் வழங்கப்படும் என மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி தெரிவித்துள்ளார். மீட்புப் பணி துரிதமான நடைபெற்று வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!