ஜப்பானின் கடல்சார் தற்காப்பு கப்பல் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் அகேபோனோ கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (28.10) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள இந்தக் கப்பல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (31) நாட்டில் இருந்து புறப்படவுள்ளது.
150.5 மீற்றர் நீளமுடைய இந்த கப்பலின் கட்டளை அதிகாரியான கப்டன் ஹிசாடோ சோடோகாவா மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா ஆகியோர் கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்றை நடத்தினர்.
இந்த கப்பல் நாட்டில் தங்கியிருக்கும்போது இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தும் வகையில் இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.