இஸ்ரேலில் உயிரிழந்த அனுலா ஜயதிலக்கவின் உடல் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் உயிரிழந்த இலங்கைப் பெண்ணான அனுலா ஜயதிலக்கவின் பூதவுடல் இன்று (28.10) காலை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
சடலத்தை பெறுவதற்காக அவரது உறவினர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவும் இதன்போது பிரசன்னமாகியிருந்தது.
அனுலா ஜயதிலக்க முதலில் காணாமல்போனதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவரது சடலத்தை உறுதிப்படுத்த DNA பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே அவரது பூதவுடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.