பாணந்துறை நகருக்கு அண்மையில் இரண்டு மாடி கட்டிடத்தில் தீ பரவல்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பாணந்துறை நகருக்கு அண்மையில் இரண்டு மாடி கட்டிடத்தில் தீ  பரவல்!

பாணந்துறை நகருக்கு அருகில் உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தில் இன்று (28.10) காலை தீ பரவியதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த கட்டடத்தில் விளையாட்டுப் பொருட்கள் விற்பனை வர்த்தகம் இடம்பெற்றதாகவும், தீயினால் கடையிலிருந்த பல விளையாட்டுப் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

மொரட்டுவை மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினர் வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன்,   தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், சேதம் கணக்கிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!