இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த தீர்மானம் நிறைவேற்றம்!
#UN
#War
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் சிறப்பு அமர்வின் போது, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் விரைவான மற்றும் நிலையான மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 14 வாக்குகளும் கிடைத்தன. 45 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பிரேரணையை இலங்கையும் ஆதரித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது நடந்துவரும் ஹமாஸ் - இஸ்ரேல் இடையிலான போர் நிறைவுக்கு வரவேண்டும் என பெரும்பாலான நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.



