பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி; ரூ.3.5 லட்சம் கோடி இழப்பு!

#India #economy #2023 #Tamilnews #Breakingnews #ImportantNews #Market #stock_market
Mani
2 years ago
பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி; ரூ.3.5 லட்சம் கோடி இழப்பு!

இந்திய பங்குசந்தைகளில் இன்று காலை வர்த்தகத்தின்போது 15 நிமிடத்திற்குள் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.3.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஹமாஸ் - இஸ்ரேலுக்கு இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் நிச்சயமற்ற சூழல் காணப்பட்டு வருகிறது. முதலீட்டாளர்கள் புதிய முதலீடுகளை மேற்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர். தங்கள் வசமுள்ள பங்குகளை விற்று வெளியேறுவது அதிகரித்துள்ளது. இதனால், பங்குச் சந்தையில் தொடர் சரிவு காணப்படுகிறது. கடந்த 5 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன.

மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட முன்னணி நிறுவனங்களின் பங்குகள்கூட சரிவில் இருந்து தப்பவில்லை. இதனால் முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. 6-வது நாளாக இன்றும் பங்குச்சந்தைகள் சரிந்தன. மும்பை பங்குச்சந்தையில் இன்று சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. 6 நாட்களில் கிட்டத்தட்ட 3000 புள்ளிகள் சரிந்துள்ளன.

டெக் மஹிந்திராவின் வருவாய் குறைவு தொடர்பான அறிக்கை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் ஒட்டுமொத்த செயல்திறன் ஆகிய காரணங்களாலும் பங்குச் சந்தைகள் பாதிக்கப்பட்டன. இன்று காலை வர்த்தகத்தின்போது 15 நிமிடங்களில் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.3.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பங்குகள் சரிந்து வருவதால், முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 5 நாட்களாக இந்திய பங்குச்சந்தையில் சரிவு காணப்பட்டு வருகிறது. இந்த 5 நாட்களில் பங்குகளின் மதிப்பு 3.5 சதவீதம் சரிந்துள்ளது. முன்னதாக நேற்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 522 புள்ளிகள் குறைந்து 64,049 ஆக சரிந்தது. நிஃப்டி 159 புள்ளிகள் குறைந்து 19,122 ஆக குறைந்துள்ளது. சதவீத அடிப்படையில் சென்செக்ஸ் 0.81 சதவீதமும் நிஃப்டி 0.83 சதவீதமும் சரிந்தன.

அதிகபட்சமாக இன்போசிஸ் 2.74% சரிவைக் கண்டது. அதானி எண்டர்பிரைசஸ் 2.24%, சிப்லா 2.23%, அப்பல்லோ ஹாஸ்பிட்டல் 2.21%, என்டிபிசி 1.90% என்ற அளவில் சரிவைக் கண்டன. எனினும், கோல் இந்தியா (1.37 %), டாடா ஸ்டீல் (1.13%), ஹிண்டால்கோ (0.99%) ஆகிய நிறுவனங்களின் பங்குகள் நேற்றைய வர்த்தக முடிவில் ஏற்றம் கண்டன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4