கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுமிகள் பலாத்காரம்: அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

#SriLanka #children #Crime #Abuse #Sexual Abuse
Mayoorikka
2 years ago
கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுமிகள் பலாத்காரம்: அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

கடந்த ஒரு மாதத்தில் 16 வயதுக்குட்பட்ட 168 சிறுமிகள் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க கொழும்பில் தெரிவித்தார். 

 இவ்வருடம் செப்டம்பர் 1ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களது உறவினர்களால் கற்பழிக்கப்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார். 

 அதில் இருபத்தி இரண்டு சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளதாக கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். 

 கர்ப்பம் தரித்த சிறுமிகளில் 15 பேர் காதல் உறவின் பின்னர் கர்ப்பம் தரித்ததாகவும், ஏழு சிறுமிகள் பலவந்தமாக வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!