கடலூர் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
#India
#Tamil Nadu
#2023
#Tamilnews
#ImportantNews
#Cyclone
Mani
2 years ago
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, பின்னர் வலுவடைந்து தீவிர புயலாக மாறியது. இந்த புயலுக்கு ஹாமுன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஹாமுன் புயல் நேற்று இரவு ஒடிசா மாநிலம் பேரதிப் துறைமுகத்தில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் மையம் கொண்டிருந்தது.
பின்னர் வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று (புதன்கிழமை) வங்காளதேசம் நாட்டில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 104 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.
புயல் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு என்பது புயல் உருவாகி இருப்பதை குறிப்பதாகும்.