சர்வதேச திரைப்பட விழாவுக்கு தெரிவான தமிழ் படங்கள்

#India #Cinema #TamilCinema #International #Award
சர்வதேச திரைப்பட விழாவுக்கு தெரிவான தமிழ் படங்கள்

கோவாவில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ள படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. கோவாவில் நவம்பர் 20 முதல் 28 ஆம் திகதி வரை சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது.

இதில், 7 பிரிவுகளின் கீழ் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஒக்டோபர் 10ம் திகதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ள படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை, மணிரத்தினத்தின் பொன்னியம் செல்வன் இரண்டாம் பாகம், ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான காதல் என்பது பொதுவுடைமை, சம்யுக்தா விஜயனின் நீல நிற சூரியன் ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

குறும்படங்களின் பட்டியலில், பிரவீன் செல்வன் இயக்கிய நன்செய் நிலம் படம் தேர்வாகி உள்ளது.

 சர்வதேச திரைப்பட விழாவில் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸிற்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு