மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு வழங்கிய சுமண ரத்ன தேரர்!
#SriLanka
#Batticaloa
#shanakiyan
#Human Rights
PriyaRam
2 years ago
மட்டக்களப்பு காணி விவகாரம் தொடர்பில் அம்பிட்டிய சுமண ரத்ன தேரரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் தலையீட்டில் மட்டக்களப்பு மகாவலி கிராமங்களில் இருந்து சிங்கள மக்கள் வெளியேற்றப்பட்டமை, பிக்குகளுக்கு பொலிஸாரால் துன்புறுத்தல் மற்றும் புத்தர் சிலையை சாணக்கியன் அகற்றியமை, பாதுகாப்புப் படையினர் தடுத்தமை, உள்ளிட்ட விவகாரங்களை குறிப்பிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருடன் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.