மும்பையில் 8 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
#India
#fire
#Tamilnews
#Breakingnews
#Mumbai
Mani
2 years ago
மும்பை மேற்கு கன்டிவாலி பகுதியில் உள்ள எட்டு மாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், நான்கு பேர் பலத்த காயம் அடைந்தனர்.
நேற்று நண்பகல் 12:30 மணியளவில் திடீரென கட்டிடத்தின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த நிலையில் தீயானது மளமளவென மேல் தளங்களுக்கு பரவியது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் 10க்கும் மேற்பட்ட வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர், மேலும் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.