போரால் பாதிக்கப்பட்ட காசாவிற்கு இந்தியா மருத்துவ மற்றும் நிவாரண உதவிகளை அனுப்பியது

#India #world_news #War #Breakingnews #Gaza
Mani
10 months ago
போரால் பாதிக்கப்பட்ட காசாவிற்கு இந்தியா மருத்துவ மற்றும் நிவாரண உதவிகளை அனுப்பியது

இஸ்ரேல்-ஹமாஸ் போர் மூன்றாவது வாரத்தை எட்டிய நிலையில், ராபா எல்லை வழியாக காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் அனுப்பப்பட்டன. இருப்பினும் காசாவில் உள்ள 1.6 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு மேலும் மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட காசாவிற்கு இந்திய அரசு சார்பில் மருத்துவ மற்றும் நிவாரண உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விவகாரம் குறித்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தாம் பக்ஷி தனது 'எக்ஸ்' சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காசா மக்களுக்கு இந்தியா மனிதாபிமான உதவிகளை அனுப்புகிறது. பாலஸ்தீன மக்களுக்காக சுமார் 6.5 டன் மருத்துவ உதவிப் பொருட்களையும் 32 டன் பேரிடர் நிவாரணப் பொருட்களையும் ஏற்றிக்கொண்டு ஐ.ஏ.அப். சி-17 விமானம் எகிப்தில் உள்ள எல்-அரிஷ் விமான நிலையத்திற்கு புறப்பட்டது.

உயிர் காக்கும் மருந்துகள், அறுவை சிகிச்சை பொருட்கள், கூடாரங்கள், தார்பாய்கள், சுகாதார பொருட்கள், தண்ணீர் சுத்திகரிப்பு மாத்திரைகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.