திருவள்ளூர்: கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து
#India
#Accident
#Tamil People
#2023
#Breakingnews
#ImportantNews
Mani
2 years ago
திருவள்ளூர் மாவட்டம், ராமரெட்டிபாளையம் அருகே அமைந்துள்ள பெருமாள் கோவிலில் நேற்று திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் சாமி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் பட்டாசுகள் மற்றும் வான வேடிக்கைகளை வெடித்தப்படியே சென்றனர். வான வேடிக்கையின் போது பட்டாசு வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீயானது வேகமாக பரவியது. பெரும் போராட்டத்துக்கு பின்னர் தீயானது அணைக்கப்பட்டது.
இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து, மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.