தெற்காசியாவின் சிறந்த விமான சேவைக்கான விருதை வென்றுள்ளது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்
#SriLanka
Prathees
2 years ago
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெற்காசியாவின் முதல் விமான சேவையாக விருதுகளை வென்றுள்ளது.
இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்ற தெற்காசிய சுற்றுலா விருது விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.
சிறந்த வணிக வகுப்பு விருதையும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வென்றுள்ளது. விருதுகள் விமான நிறுவனங்கள் மற்றும் விமானத் துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் வாக்களிக்கப்படுகின்றன.
கடந்த வருட விருது வழங்கும் விழாவில் விருந்தினர்களின் தெரிவின் அடிப்படையில் ஆண்டின் சிறந்த விமான சேவைக்கான விருதையும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வென்றுள்ளது.