நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் - சபாநாயகர் விடுத்துள்ள அறிவிப்பு!
#SriLanka
#Parliament
#mahinda yappa abewardana
#speaker
PriyaRam
2 years ago
நாடாளுமன்றத்தில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை சமர்ப்பிக்கப் போவதில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.
நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இந்த சட்டமூலம் உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும், அது முன்வைக்கப்படாது என மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை எதிர்த்து 45 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.