அமெரிக்காவில் வேலை தருவதாக கூறி பண மோசடி செய்த இராணுவ மேஜரின் மனைவி!
#SriLanka
#Arrest
#Crime
#Sri Lankan Army
Mayoorikka
2 years ago
அமெரிக்காவில் வேலை தருவதாக கூறி பண மோசடி செய்த சம்பவம் தொடர்பில் இராணுவ மேஜர் ஒருவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்குரிய மேஜரைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸ் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பாணந்துறை பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

பாணந்துறை கோரக்கன பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகத்திற்குரிய மேஜர் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள முகாமில் பணிபுரிவதாக தகவல் கிடைத்துள்ளது.
வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றியதாக பல பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதோடு, அவரது வீட்டிலிருந்து பல கடவுச்சீட்டுகளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.