பிரகடன நீடிப்பு - ரணில் வெளியிட்டுள்ள அதி விசேட வர்த்தமானி!

#SriLanka #Ranil wickremesinghe #Gazette
PriyaRam
2 years ago
பிரகடன நீடிப்பு -  ரணில் வெளியிட்டுள்ள அதி விசேட வர்த்தமானி!

இலங்கையில், 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17 ஆம் திகதி முதல் பல துறைகளுக்கான அத்தியாவசிய சேவை பிரகடனத்தை நீடித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.

1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் பிரிவு 2 இன் படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

மின்சார விநியோகத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருளை வழங்குதல், விநியோகித்தல் என்பன அத்தியாவசிய சேவைகளாக்கப்பட்டுள்ளன.

images/content-image/2023/10/1697603008.jpg

மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் மருத்துவ நிலையங்களில் உள்ள நோயாளிகளின் பராமரிப்பு, வரவேற்பு மற்றும் சிகிச்சை தொடர்பாக அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!