கொத்தமல்லி என்ற போர்வையில் பீடி இலைகள் இறக்குமதி!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கொத்தமல்லி என்ற போர்வையில் பீடி இலைகள் இறக்குமதி!

கொத்தமல்லி என்ற போர்வையில் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளை சுங்க மத்திய புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று (16.10) கைப்பற்றியுள்ளது. 

கைப்பற்றப்பட்ட பீடி இலகளின் பெறுமதி எட்டு கோடியே அறுபது லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

 குறித்த பீடி இலைகள்  இந்தியாவின் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து இரண்டு 20 அடி நீளமான  கொள்கலனில் கடத்தப்பட்டுள்ளது.  ஹோமாகம பகுதியில் வசிக்கும் ஒரு இறக்குமதியாளரால் இவை நாட்டிற்குகொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

இந்த இரண்டு கொள்கலன்களிலும் 11,460 கிலோ எடை கொண்ட பீடி இலைகள் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பீடி இலைக்கு வரி விலக்கு அளித்திருந்தால், அரசுக்கு, ஏழு கோடியே எழுபது லட்சம் ரூபா வரி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என சுங்கத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!