178 வருடத்திற்கு பின்னர் இன்று வானில் நிகழவுள்ள மிகப்பெரும் அதிசயம்: வெளியானது நேர அறிவிப்பு

#SriLanka #sun #Moon
Mayoorikka
1 year ago
178 வருடத்திற்கு பின்னர் இன்று வானில் நிகழவுள்ள மிகப்பெரும் அதிசயம்: வெளியானது நேர அறிவிப்பு

இந்த ஆண்டின் பெரிய சூரிய கிரகணம் இன்று நிகழ்கின்றது. 178 வருடத்திற்கு பிறகு வரும் அபூர்வ சூரிய கிரகணம் இதுவாகும்.

 இன்று காலை 11:46 மணிக்குத் ஆரம்பமாகி, மதியம் 1:07 மணிக்கு கிரகணம் அதன் உச்சத்தினை அடைந்து பின்னர் படிப்படியாக குறையும் என்று கூறப்படுகிறது.

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் மிகவும் அரிதான நிகழ்வாக கருதப்படுகிறது.

 சூரியனின் பரப்பளவில் 50% பகுதியை உள்ளடக்கும் பெரிய சூரிய கிரகணம் இதுவாகும். இந்த ஆண்டின் பெரிய சூரிய கிரகணம் இது என்பதால் இதனை வளைய கிரகணம் அல்லது நெருப்பு கிரகண வளையம் என வானியலாளர்கள் அழைக்கிறார்கள்.

 அமெரிக்காவின் தென் மேற்கு மற்றும் மேற்கு கடற்கரைபகுதிகளில் உள்ளவர்கள் இந்த அற்புத காட்சியை காண முடியும் என்று கூறப்படுகிறது. 

images/content-image/2023/10/1697257671.jpg

ஓஹியோவில், சந்திரன் சூரியனை மேலும் மேலும் மறைக்கத் தொடங்கும் போது, மரங்களின் கீழ் நிழல்கள் மாறுவதைக் காணக்கூடியவாறு இருக்கும் என்று வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 இம்முறை ஓஹியோவில் தோன்ற இருக்கும் சூரியனை முழுமையாக மறைக்கும் இந்த பெரிய சூரிய கிரகணமானது இந்த நூற்றாண்டுக்கான இறுதி சூரிய கிரகணம் என்றும் கூறப்படுகிறது.

 இந்த கிரகணத்தின் பொது, ஒரு இருள் சுவர் மணிக்கு 1,000 மைல் வேகத்தில் உங்களை நோக்கி வருவதை இந்த கிரகணம் உணர வைக்கும் என்று கூறப்படுகிறது.

 பகலில் நடக்கும் இந்தநிகழ்வின் போது சூழல் முற்றிலும் வெப்பத்தை கக்கிக்கொண்டு இருக்கையில் குளிர்மையுடன் இருளும் சூழ்கின்ற வித்தியாசமான மாற்றங்களை இந்தக் கிரகணம் தோற்றுவிக்கும் என எதிர்வுகூறப்படுகிறது.

 இந்த மாற்றத்தால் விலங்குகள் வித்தியாசமாக செயற்படும் என்றும் வானியலாளர்கள் எச்சரிக்கிறார்கள் இதனால் அனைவரையும் பாதுகாப்பாக இருக்கும் படியும் பணித்திருக்கிறார்கள்.


 இதேவேளை மகாளய அமாவாசை இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. ஓர் ஆண்டில் 12 அமாவாசைகள் வரும். அவற்றில் ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் அமாவாசைகள் முக்கியமானவை.

images/content-image/2023/10/1697257765.jpg

 இந்த மூன்று அமாவாசைகளிலும் புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை மிகவும் முக்கியமானது. 

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!