இலங்கை அரசாங்கம் வழங்கவுள்ள இலவச சுற்றுலா விசா!
#India
#SriLanka
#China
#Tourist
#Visa
#Tourism
PriyaRam
2 years ago
சீனா, ரஷ்யா, இந்தியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட 5 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த இலவச சுற்றுலா விசாவுக்கான அமைச்சரவை பத்திரத்தை சுற்றுலா அமைச்சு சமர்ப்பித்துள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தன, சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் இணைந்து இந்த யோசனையை முன்வைத்துள்ள நிலையில், இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் கடந்த வாரம் அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.