இஸ்ரேலில் மாயமான இலங்கையர்கள் குறித்து அறிய சென்ற இலங்கை தூதுவரின் பயணம் இடைநிறுத்தம்!

#SriLanka #Israel #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இஸ்ரேலில் மாயமான இலங்கையர்கள்  குறித்து அறிய சென்ற இலங்கை தூதுவரின் பயணம் இடைநிறுத்தம்!

இஸ்ரேல் - பலஸ்தீன மோதல்களுக்கு மத்தியில் காணாமல் போனதாக கூறப்படும் இலங்கையர்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக மேற்கு காசா பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை தூதுவர் தற்போதைய சூழ்நிலை காரணமாக விஜயத்தை நிறுத்த வேண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இஸ்ரேல் பாதுகாப்பு தரப்பினர் விடுத்த அறிவித்தலின் பிரகாரம் தனது விஜயத்தை நிறுத்திவிட்டு நாடு திரும்ப நேரிட்டதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.  

குறித்த மோதலில் இரு இலங்கையர்கள் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்காக நேற்று (11.10) இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர்  நிமல் பண்டார உள்ளிட்ட பிரதிநிதிகள் மேற்கு காசா பகுதிக்கு விஜயம் செய்தனர்.  

எனினும், அப்பகுதியில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதால், அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவிப்பு வெளியிட்டனர். இதன்படி, காணாமல் போனதாகக் கூறப்படும் இலங்கையர்கள் தொடர்பில் இதுவரையில் குறிப்பிட்ட தகவல்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!