தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட மண்சரிவில் நான்கு STF வீரர்கள் காயம்
#SriLanka
#Land_Slide
Prathees
2 years ago
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மண்சரிவு ஏற்பட்டதால், அந்த இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் நான்கு அதிகாரிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வீதி அபிவிருத்தி அதிகாரசபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னதுவ மற்றும் இமதுவக்கு இடைப்பட்ட 102 ஆவது கிலோமீற்றர் மின்கம்பத்திற்கு அருகாமையில் வீதியின் இருபுறமும் உள்ள மலைகளே இவ்வாறு சரிந்து வீழ்ந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், அந்த மலைப்பகுதிகளில் அதிகம் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.