காசாவில் எரிபொருள் தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி நிலையம் முடக்கம்

#government #Israel #Power station #power cuts #Fight #Hamas
Prasu
1 year ago
காசாவில் எரிபொருள் தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி நிலையம் முடக்கம்

காசாவில் 5வது நாளாக ஹமாஸ் படைகளை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் குண்டு வீச்சில் ஐ.நா ஊழியர்கள் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதைதொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு- எதிர்க்கட்சி தலைவர் பென்னி காண்ட்ஸ் சுமார் 3 மணி நேரமாக ஆலோசனை. போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஒற்றுமை அரசாங்கம் அமைப்பது தொடர்பாக இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காசாவில் எரிபொருள் தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி நிலையம் முடங்கியது. இதன் எதிரொலியால், காசா இருளில் மூழ்கியது. உணவு, தண்ணீர், எரிபொருள், மின்சாரம் என அனைத்தையும் காசாவிற்கு கொண்டு செல்ல இஸ்ரேல் ஏற்கனவே தடை விதித்துள்ளது.

 மின்சாரம் இல்லாததால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் நிலை கேள்விக் குறியாகியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!