கொழும்பில் மரங்களை கண்காணிக்க பயன்படுத்தப்படும் இயந்திரத்தை இயக்க ஆள் இல்லை
#SriLanka
#Colombo
#Tree
Prathees
2 years ago
கொழும்பு மாநகரில் உள்ள மரங்களின் சிறப்பு அவதானிப்புக்காக விசேட இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்டதாக வெளியான செய்திகள் உண்மையென கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்த இயந்திரத்தை இயக்குவதற்கு தகுந்த ஆள் நியமிக்கப்படவில்லை என்றும், அந்த இயந்திரம் இதுவரை பயன்படுத்தப்படவில்லை என்றும் கூறினார்.
கொழும்பு மாநகரசபைக்கு 2015ஆம் ஆண்டு 75 இலட்சம் ரூபா பெறுமதியான இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.