சிறப்பு அதிரடிப்படை முகாம்களில் 43 வாகனங்கள் பயன்படாத நிலையில்! வெளியான அறிக்கை
#SriLanka
#luxury vehicle
#Sri Lankan Army
#vehicle
Mayoorikka
2 years ago
ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் திட்டத்தின் கடமைகளுக்காக 2017 ஆம் ஆண்டு முதல் கொள்வனவு செய்யப்பட்ட 42 வாகனங்கள் எவ்வித நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படாமல் மூன்று விசேட அதிரடிப்படை தளங்களில் வைக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
அந்த வாகனங்கள் மற்றும் அவற்றுடன் கூடுதலாக வாங்கப்பட்ட பொருட்கள் மற்றும் உபகரணங்களை வாங்க ஐந்து ஆண்டுகளில் 178 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
விசேட அதிரடிப்படைக்கு சொந்தமான கட்டுகுருந்த, பயிற்சி பாடசாலை, ஹொரண மற்றும் கொனஹேன முகாம்களில் வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கின்றது.