போராட்டம் காரணமாக கொழும்பு சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
#SriLanka
#Protest
#doctor
PriyaRam
2 years ago
வைத்தியர்களின் போராட்டம் காரணமாக சுகாதார அமைச்சிலிருந்து நகர மண்டபம் வரையான வீதியில் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான வைத்தியர்கள் கலந்து கொண்டுள்ளதுடன், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வை வழங்காமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம் நடத்தப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.