மதிய உணவுத் திட்டம் தொடர்பில் பிரான்சுடன் பேச்சுவார்த்தை!
#SriLanka
#France
#Food
#School Student
Mayoorikka
2 years ago
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இலவச மதிய உணவு வழங்கும் நோக்கில் பிரான்ஸ் அரசாங்கம் உட்பட பல தரப்பினருடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடல்களுக்கு இலங்கை அதிகபட்ச பங்களிப்பை வழங்கி வருவதாகத் தெரிவித்த அமைச்சர், 2030ஆம் ஆண்டுக்குள் அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் பாடசாலை மதிய உணவை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
இதுவரை கலந்துரையாடப்பட்ட தரப்புகளிடமிருந்து சாதகமான பதில்கள் கிடைத்துள்ளதாகவும், இத்திட்டத்தை தொடர தன்னால் இயன்றவரை முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.
முல்லைத்தீவு மல்லாவி நடுநிலைப் பாடசாலையில் நேற்று (10) இடம்பெற்ற விவசாயக் கண்காட்சியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.