டெங்கு மீண்டும் பரவுவதற்கான அறிகுறிகள் - சுகாதாரத் துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
தற்போது நிலவும் மழையுடன் கூடிய டெங்கு நோயாளர்கள் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அகற்றுவது அனைத்து தரப்பினரின் பொறுப்பாகும் என அதன் சமூக வைத்திய அதிகாரி டொக்டர் இந்திக்க வீரசிங்க தெரிவித்தார்.
இதன் காரணமாக நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அகற்றுவது அனைத்து தரப்பினரின் பொறுப்பாகும் என அதன் சமூக வைத்திய அதிகாரி டொக்டர் இந்திக்க வீரசிங்க தெரிவித்தார்.
இந்த வருடத்தில் சில வாரங்களில் வாரத்திற்கு சுமார் 2700 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
மக்களின் ஆதரவினால் வாராந்தம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 600 ஆகக் குறைந்துள்ளது என்றார்.
மக்கள் வழங்கும் ஆதரவை எதிர்காலத்தில் எதிர்பார்க்கிறோம் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய அதிகாரி டொக்டர் இந்திக்க வீரசிங்க மேலும் தெரிவித்தார்.