ஆசிய விளையாட்டு போட்டி : இலங்கை வீரர்கள் நாடு திரும்பினர்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
சீனாவின் Hangzhou நகரில் நடைபெற்ற 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற வெற்றியாளர் அணியினர் நேற்று (10.10) இரவு இலங்கை வந்தடைந்தனர்.
தங்கப் பதக்கத்தையும் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று நாட்டிற்கு வருகை தந்த தருஷி கருணாரத்ன அதிக கவனத்தைப் பெற்றார்.
21 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்காக தங்கப் பதக்கத்தை வென்று தந்தவர் என்ற பெருமையை தருஷி கருணாரத்ன பெற்றுள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய தருஷி கருணாரத்ன 2:03.20 நிமிடங்களில் போட்டியை நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
தற்போது ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் அவர் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.