கைத்தொலைபேசியால் ஏற்பட்ட வாக்குவாதம் : பறிபோன இளைஞரின் உயிர்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
கொழும்பில் கைத்தொலைபேசி தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து 24 வயதுடைய இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு கொட்டாஞ்சேனை குணானந்த மாவத்தையில் உள்ள மின்மாற்றிக்கு அருகில் குறித்த இளைஞர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர் தனது பெற்றோர் மற்றும் சகோதரியுடன் குணானந்த மாவத்தையில் வசித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்டநபர் ஒரு நண்பரை சந்தித்த பின்னர், இருவரும் மின்மாற்றிக்கு அருகில் வந்து கையடக்கத் தொலைபேசியில் மற்றொரு நபருடன் தகராறில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாக்குவாதத்தின் போது சந்தேக நபர் கத்தியால் முதுகில் குத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குறித்த நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.