இஸ்ரேல் போர்; சர்ச்சை கருத்துகளை பதிவிட்ட 'மியா கலீஃபா'!

#Actress #Israel #War #2023 #prostitute #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
இஸ்ரேல் போர்; சர்ச்சை கருத்துகளை பதிவிட்ட 'மியா கலீஃபா'!

முன்னாள் ஆபாசப் பட நடிகையான மியா கலிபா, இஸ்ரேல் போர் குறித்துக் கூறிய கருத்துகள் சர்ச்சையான நிலையில், அவருடன் செய்திருந்த ஒப்பந்தங்களை இரண்டு பிரபல நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன.

இஸ்ரேல் மீது ஹமாஸ் படை கடந்த சனிக்கிழமை யாருமே எதிர்பார்க்காத வகையில் மோசமான தாக்குதலை நடத்தியது. வெறும் 20 நிமிடத்தில் சரமாரியாக 5000 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேல் நாட்டில் நுழைந்த ஹமாஸ் படையினர் அங்குள்ள அப்பாவி மக்களையும் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. மேலும், பலரையும் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் ஆபாசப் படங்களில் நடித்துப் புகழ் பெற்றவரான நடிகை மியா கலிபா இஸ்ரேல் போர் தொடர்பாக சில சர்ச்சை ட்வீட்களை பதிவு செய்திருந்தார். "பாலஸ்தீனியர்கள் இத்தனை காலம் அடைந்த துன்பத்தைப் பார்த்தும் பாலஸ்தீன ஆதரவாக இருக்கவில்லை என்றால் நீங்கள் இந்த விவகாரத்தில் தவறான இடத்தில் நிற்கிறீர்கள் என்று அர்த்தம்.. வரலாறு உங்களுக்குப் பாடத்தைச் சொல்லித் தரும்" என்று ஒரு பதிவிட்டுள்ளார்.

அதேபோல மற்றொரு ட்வீட்டில் அவர், "பாலஸ்தீனத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களிடம் யாராவது அவர்கள் படும் துயரத்தை ரெக்கார்ட் செய்யச் சொல்ல முடியுமா" எனப் பதிவிட்டிருந்தார். பாலஸ்தீன பயங்கரவாதிகளைச் சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று மியா கலிபா அழைத்ததே பெரும் சர்ச்சைக்குக் காரணமாக அமைந்தது. நெட்டிசன்கள் பலரும் மியா கலிபா கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மியா கலிபாவின் இந்த நடவடிக்கை காரணமாக அவருடன் போட்டியிருந்த பிஸ்னஸ் டீலை உடனடியாக ரத்து செய்வதாகக் கனடா நாட்டின் பிரபல வானொலி தொகுப்பாளர் டோட் ஷாபிரோ அறிவித்துள்ளார். "மியா கலிபா செய்த செயலை ஏற்கவே முடியாது. அவருடன் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்கிறோம். நீங்கள் செய்தது அருவருப்பானது. தயவு செய்து சிறந்த மனிதனாக மாறுங்கள். கொலை, பலாத்காரம், பிணையக் கைதிகளாக அப்பாவிகளைப் பிடித்துச் செல்வதை நீங்கள் ஏற்பது உண்மையிலேயே மோசமானது. உங்கள் செயலை கண்டிக்க வார்த்தைகளே இல்லை" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

அதேபோல அமெரிக்காவின் பிரபல அடல்ட் பத்திரிகையான ப்ளே பாய் நிறுவனமும் மியா கலிபாவுடனான அனைத்து டீல்களையும் ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. ஹமாஸின் தாக்குதல்களைக் கொண்டாடும் அருவருப்பான மற்றும் கண்டிக்கத்தக்க கருத்துக்களைக் கூறியதால் மியா கலிபா உடன் போட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. பிளேபாய் பத்திரிகையில் அவரது பெயர் படங்கள் உள்ளிட்டவற்றை நீக்கும் பணியிலும் அது ஈடுபட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4