என்-ரூட் நேவிகேஷன் வசதிக் கட்டண விதிமுறைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை ஒப்புதல்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சரின் திருத்தப்பட்ட என்-ரூட் நேவிகேஷன் வசதிக் கட்டண விதிமுறைகளை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்க அமைச்சர்வை ஒப்புதல் அளித்துள்ளது.
1981 ஆம் ஆண்டு கொழும்பு விமான தகவல் பிராந்தியத்தின் ஊடாக பறக்கும் விமானங்களுக்கு என்-ரூட் நேவிகேஷன் வசதி கட்டண விதிமுறைகள் விதிக்கப்பட்டன.
கடந்த காலத்தில் இந்த விதிமுறைகள் திருத்தப்படவில்லை. எனவே, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் கொள்கைகள் மற்றும் தற்போதைய உலகளாவிய போக்குகளைக் கருத்தில் கொண்டு, என்-ரூட் நேவிகேஷன் வசதிக் கட்டண விதிமுறைகள் திருத்தப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.



