பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
#SriLanka
#Susil Premajayantha
#Ministry of Education
#education
PriyaRam
2 years ago
அனைத்து தரங்களிலும் உள்ள மாணவர்கள் நாளாந்தம் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டியது கட்டாயமானது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் நாளாந்த பாடசாலை வருகை வீழ்ச்சியடையுமாயின், எதிர்வரும் காலங்களில் நடத்தப்படும் பரீட்சைகளில் அவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.
* அத்துடன், அடுத்த வருடம் ஜனவரி மாதம், கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இடம்பெறுகின்ற சந்தர்ப்பத்திலும் ஆரம்ப பிரிவுகளுக்கான கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.