ஜப்பானில் கடலோரப் பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கை

#Earthquake #tsunami #Japan #Warning #beach
Prasu
2 years ago
ஜப்பானில் கடலோரப் பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட லேசான அதிர்வுகளைத் தொடர்ந்து இன்று கடலோரப் பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பசிபிக் பெருங்கடலில் உள்ள Izu islands அதிர்வுகள் ஏற்பட்டன. 

ஹச்சிஜோஜிமா தீவில் சுமார் 60 செண்டிமீட்டர் உயர அலைகள் எழுந்தன. மேற்கு, தெற்குப் பகுதிகளில் 20 முதல் 40 செண்டிமீட்டர் உயர அலைகள் எழுந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வகம் தெரிவித்தது.

இதுவரை சேதம் குறித்தத் தகவல் இல்லை. தோக்கியோவின் அருகிலுள்ள Tateyama நகரில் குடியிருப்பாளர்கள் வீடுகளைவிட்டு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

 கடற்கரைக்குச் செல்வதைத் தவிர்க்கும்படி அதிகாரிகள் ஆலோசனை கூறியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!