ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை!
#SriLanka
PriyaRam
2 years ago
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சரியாக நடத்தப்படாவிட்டால், இலங்கையில் சேவைகளை வழங்குவதற்கு ஏனைய விமான நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், கடந்த சில நாட்களாக ஏற்பட்ட விமான தாமதம் காரணமாக சுமார் 6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான பல விமானங்கள் தொடர்ச்சியாக தாமதமாகி வருவதால் இலங்கை பிரஜைகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அதன் பிரதிநிதிகளுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்திய போதிலும், அவையும் உரிய தீர்வின்றி முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.