இறக்குமதி கட்டுப்பாடுகளின் பலன்கள் மக்களை சென்றடையுமா?
#SriLanka
#Sri Lanka President
#Import
Mayoorikka
2 years ago
இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பொருட்களின் பலன்கள் மக்களை சென்றடையுமா? இல்லையா? என்பதை வர்த்தக அமைச்சும் நுகர்வோர் அதிகார சபையும் கண்காணிக்க வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இறக்குமதி வரம்புகள் இருந்த காலக்கட்டத்தில் சில பொருட்களின் விலைகள் அதிகரித்து, பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டது.
இதையடுத்து, தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்குவது குறித்தும் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.