இரண்டு மோட்டார் சைக்களில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து : ஒருவர் பலி!

#SriLanka #Accident #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இரண்டு மோட்டார் சைக்களில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து : ஒருவர் பலி!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக மில்லனிய பொலிஸார் தெரிவித்தனர்.  

மில்லனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனாபே பாலத்திற்கு அருகில் நேற்று (09.10) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

 ஹல்தோட்டை யலாகல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஹிரந்த சர்மிந்த என்ற நபரே விபத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கொலமதிரிய பகுதியில் இருந்து மில்லனிய நோக்கி பயணித்த போது, ​​பனாபே பாலத்திற்கு அருகில் எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். 

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மற்றும் உயிரிழந்தவரின் மனைவி ஆகியோர்  படுகாயமடைந்து பண்டாரகம பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் ஹொரண மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.  

விபத்தில் படுகாயமடைந்த மற்றைய மோட்டார் சைக்கிள் சாரதி பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மில்லனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!