“ஷி யான் 6” என்ற சீன கப்பல் இலங்கை வர அனுமதி!

#SriLanka #Ali Sabri #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
“ஷி யான் 6” என்ற சீன கப்பல் இலங்கை வர அனுமதி!

“ஷி யான் 6” என்ற சீனக் கப்பல் இலங்கைக்கு வருவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

குறித்த கப்பல் எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  அக்டோபரில் வர அனுமதி கேட்டார்கள். நவம்பரில் வரச் சொன்னோம். பிறகு மீண்டும் அக்டோபர் இறுதியில் வருவதாகச்  சொன்னார்கள். ஆனால் நாங்கள் இன்னும் முன்பிருந்த நிலையிலேயே இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

"சீனா மிகவும் முக்கியமானது. சீனாவுடன் பல மிக முக்கியமான உறவுகள் உள்ளன. ஆனால் நம் நாட்டில் செய்ய வேண்டிய விஷயங்கள் உள்ளன.  ஒப்புக்கொண்டு வேலையைச் செய்ய வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!